ராணிப்பேட்டையில் லாரி மோதி பள்ளி ஆசிரியை பலி

படுகாயமடைந்த ஜெயராமதாஸ் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஜமுனா உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டையில் லாரி மோதி பள்ளி ஆசிரியை பலி
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த சீக்கராஜபுரம் அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமதாஸ். இவரது மனைவி ஜமுனா (வயது 50). இவர் ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு பகுதியில் அரசினர் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக தனது கணவருடன் ஜமுனா பைக்கில் வந்தார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஐவிபிஎம் அருகே வந்த போது, பைக்கில் சாலை ஓரத்திலிருந்து சாலையில் ஏற முயன்ற போது எதிர்பாராதவிதமாக ஜமுனாவும் அவரது கணவரும் சாலையில் விழுந்தனர்.

அப்போது பின்னால் சென்னை நோக்கி செல்வதற்காக வந்த கன்டெய்னர் லாரி ஏறியதில் ஜமுனா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த ஜெயராமதாஸ் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜமுனா உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com