ராணிப்பேட்டைக்கு நாளை உள்ளூர் விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகிற 12-ந்தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டைக்கு நாளை உள்ளூர் விடுமுறை
Published on

தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள முருகன் கோவிலுக்கு அதிகளவில் மக்கள் செல்வார்கள் என்பதால், அம்மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகிற 12-ந்தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com