வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. கொதிகலன் குழாயை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் 2-வது நிலையின் 1-வது அலகில் உள்ள கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. கொதிகலன் குழாயை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com