என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொட்டிவாக்கத்தில் டாக்டர் வீட்டில் ரூ.2 லட்சம்-பொருட்கள் கொள்ளை
  X

  கொட்டிவாக்கத்தில் டாக்டர் வீட்டில் ரூ.2 லட்சம்-பொருட்கள் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளைகும்பல் கைவரிசை காட்டி உள்ளனர்.
  • கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

  வேளச்சேரி:

  நீலாங்கரை அடுத்த கொட்டிவாக்கம், வெங்கடேஸ்வரா நகர்,செயின்ட் தெருவில் வசித்து வருபவர் சரவணன். ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

  இவரது வீட்டில் விரிவாக்கப்பணி நடந்து வருவதாக தெரிகிறது. இதனால் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் திருவான்மியூரில் உள்ள மாமனார் வீட்டில் தங்கி இருந்தனர்.

  கடந்த 23-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்ற அவர்கள் நேற்று மாலை திரும்பி வந்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் டி.வி., கேமிரா, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களையும் மர்ம கும்பல் அள்ளி சென்று இருப்பது தெரிய வந்தது.

  வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளைகும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். இதுகுறித்து நீலாங்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

  Next Story
  ×