என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரட்டூரில் தலைமறைவு குற்றவாளி கைது
    X

    கொரட்டூரில் தலைமறைவு குற்றவாளி கைது

    • அப்பன்ராஜ் நீதிமன்றத்திலும், போலீஸ் நிலையத்திலும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
    • கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமறைவாக இருந்த அப்பன் ராஜை கைது செய்தனர்.

    அம்பத்தூர்:

    கொரட்டூர் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அப்பன் ராஜ் (39). இவர் மீது கொலை, கொலை மிரட்டல், கொள்ளை, அடிதடி மற்றும் கஞ்சா ஆகிய 25 வழக்குகள் கொரட்டூர், அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. மேலும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர் மீது கடந்த 26.06.2022 அன்று அம்பத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது.

    ஆனால் அப்பன்ராஜ் நீதிமன்றத்திலும், போலீஸ் நிலையத்திலும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.

    இந்த நிலையில் கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமறைவாக இருந்த அப்பன் ராஜை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×