காசிமேட்டில் பாலிடெக்னிக் மாணவர் கடலில் மூழ்கி பலி

காசிமேட்டில் பாலிடெக்னிக் மாணவர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீரில் மூழ்கி பலி
நீரில் மூழ்கி பலி
Published on

ராயபுரம்:

தண்டையார்பேட்டை, நேரு நகர், மெயின் தெருவைச் சேர்ந்தவர் ஏஜாஸ் (17) அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் தன்னுடன் படிக்கும் கிஷோர் குமார், ஜெகதீஷ், மகேஷ்குமார் ஆகியோருடன், காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில், வார்ப்பு பகுதியில் குளிக்க சென்றார்.

அப்போது, நண்பர்களுடன் மேலிருந்து கீழே கடலில் குதித்து விளையாடியபோது நீரில் மூழ்கிய ஏஜாஸ் மீண்டும் மேலே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக அருகில் இருந்த மீனவர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அவர்களும் கடலில் மூழ்கி மாயமான ஏஜாசை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மீனவர் ஒருவர் தேடும் போது நீருக்கு அடியில் மாணவனின் உடல் கிடைத்தது மாணவனின் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com