காரிமங்கலம் அருகே தென்னந்தோப்புக்கு தீ வைத்த வாலிபர் கைது

தீவனப்பயிர் மற்றும் 20 தென்னை மரங்கள் தீயில் கருகியது.போலீசார் வழக்கு பதிவு செய்து குமார் என்பவரை கைது செய்தனர்.
காரிமங்கலம் அருகே தென்னந்தோப்புக்கு தீ வைத்த வாலிபர் கைது
Published on

தருமபுரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 68). விவசாயி. இவருடைய மகன் டோக்கியோலிலும், மருமகள் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலும் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர் கடந்த 2011-ம் ஆண்டு குட்டூர் கிராமத்தில் 21/2 ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கி சுற்றிலும் கம்பி வேலி அமைத்து தென்னை மரம் மற்றும் தீவனப்பயிர்களை நடவு செய்து விவிசாயம் செய்து வந்தார்.

நிலத்தின் பாதுகாப்பிற்காக காரிமங்கலத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரை வேலைக்கு வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 27-ம் தேதி குட்டூர் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் தென்னந் தோப்பிற்கு தீ வைத்துள்ளார். இதனால் தீவனப்பயிர் மற்றும் 20 தென்னை மரங்கள் தீயில் கருகியது.

தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுகுமார் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குட்டூர் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com