காஞ்சிபுரத்தில் மூதாட்டியிடம் 7 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

காஞ்சிபுரத்தில் மூதாட்டியிடம் 7 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

மர்ம நபர் குணசுந்தரி அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் தாலிகொத்து போன்றவற்றை பறித்துகொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டார்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் மூதாட்டியிடம் 7 பவுன் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டது. அப்போது அவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

காஞ்சிபுரம் வேளிங்கப்பட்டரை அருகே உள்ள சிங்கபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி குணசுந்தரி (வயது 60). இவர் மற்றொரு மூதாட்டியுடன் தனது உறவினரின் குழந்தை பிறந்த நாள் விழாவுக்காக கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் அவர்களை நோட்டமிட்டபடி பின் தொடர்ந்து வந்தார்.

இந்த நிலையில் ஆள்நடமாட்டம் குறைந்த பகுதியில் இவர்கள் சென்றதை சாதகமாக்கி கொண்ட அந்த மர்ம நபர் குணசுந்தரி அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் தாலிகொத்து போன்றவற்றை பறித்துகொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டார்.

அந்த மர்ம நபர் நகை பறிப்பில் ஈடுபட்டபோது தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து அந்த நபரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com