களியக்காவிளை அருகே நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

சுமித்திரன் படிப்பு முடிந்து விடுதி அறைக்கு வந்து உள்ளார். ஆனால் சக மாணவர்களிடம் பேச வில்லை என்று கூறப்படுகிறது.மாணவர் சுமித்திரன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
களியக்காவிளை அருகே நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
Published on

களியக்காவிளை:

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் கிரேஷ் நர்சிங் கல்லூரி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் சுமித்திரன் (வயது 19) என்பவரும் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு தங்குவதற்காக விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சுமித்திரன் தங்கியுள்ளார்.

இவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் 4 மாணவர்கள் தங்கி உள்ளனர். நேற்று சுமித்திரன் படிப்பு முடிந்து விடுதி அறைக்கு வந்து உள்ளார். ஆனால் சக மாணவர்களிடம் பேச வில்லை என்று கூறப்படுகிறது.

எப்போதும் குதூகலமாக இருக்கும் சுமித்திரன் பேசாததால் சந்தேகமடைந்தவர்கள் சுமித்தினிடம் கேட்ட போது ஒன்றும் கூறாமல் இருந்துள்ளான்.

மேலும் இரவு 1 மணியளவில் சுமித்திரன் கழிவறை போவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். காலையில் மற்ற மாணவர்கள் எழுந்து பார்த்த போது சுமித்திரன் விடுதியின் மேல்மாடியில் இருந்து வெளியே நோக்கி தூக்கிட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இது குறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், களியக்காவிளை போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் சுமித்திரன் தானாக தூக்கிட்டு தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் மாணவர்களிடையை கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாணவர் சுமித்திரன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. அதனை படித்துப் பார்த்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com