பெரியபாளையம் அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

மர்மநபர்கள் பீரோவில் இருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம், தங்க செயின், டாலர், கம்மல் உள்ளிட்ட 7 பவுன் தங்க நகைகளையும், 3 ஜோடி வெள்ளி கொலுசுகளையும் திருடி சென்றிருந்தனர்.இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பெரியபாளையம் அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
Published on

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம் ஆரிக்கம்பேடு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் மாரியம்மாள் (வயது50). பூச்செடிகள் பயிர் செய்து வருகிறார். இவரது உறவினர் வீட்டு திருமணத்திற்காக மாரியம்மாள் வீட்டை பூட்டி விட்டு கடந்த 8-ந்தேதி காவனூர் கிராமத்திற்கு சென்றிருந்தார்.

உறவினர் வீட்டு திருமணம் முடிந்த பின்னர் நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம், தங்க செயின், டாலர், கம்மல் உள்ளிட்ட 7 பவுன் தங்க நகைகளையும், 3 ஜோடி வெள்ளி கொலுசுகளையும் திருடி சென்றிருந்தனர்.

இதுகுறித்து மாரியம்மாள் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com