நாங்குநேரி அருகே ஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை

கடந்த சில மாதங்களாக சுரேஷுக்கு வயிற்று வலி இருந்து வந்தது. கடந்த 6-ந் தேதி இரவில் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்தார்.
நாங்குநேரி அருகே ஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை
Published on

களக்காடு:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார்குளம், கீழத்தெருவை சேர்ந்த முருகன் மகன் சுரேஷ் (வயது22). இவர் சென்னையில் ஒரு ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக அவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் வயிற்று வலி தீரவில்லை. இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 6-ந் தேதி இரவில் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்தார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார்.

இதுபற்றி அவரது தந்தை முருகன் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி.ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com