சிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

குலசேகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் 4 மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

குழித்துறை:

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பொன்மனை ஈஞ்சகோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங் (30).

கடந்த செப்டம்பர் மாதம் 17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர்.

போலீஸ் வருவதை தெரிந்துகொண்ட ஜெயசிங் தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் நேற்று ஊருக்கு வந்த ஜெயசிங்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com