என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவிக்கு செல்போனில் தொல்லை- வாலிபர் கைது
    X

    திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவிக்கு செல்போனில் தொல்லை- வாலிபர் கைது

    • மப்பேடு அடுத்த மேட்டுக் கண்டிகை பகுதியைச் சேர்ந்த காமேஷ் என்பவர் கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்தது தெரிந்தது.
    • காமேஷ் மீது ஏற்கனவே குற்றவழக்குகள் உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கீழச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரது செல்போனுக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வாலிபர் ஒருவர் தொல்லை கொடுத்து வந்தார்.

    இதுகுறித்து மாணவி மப்பேடு போலீசில் புகார் செய்தார். விசாரணையில் மப்பேடு அடுத்த மேட்டுக் கண்டிகை பகுதியைச் சேர்ந்த காமேஷ் என்பவர் கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்தது தெரிந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். காமேஷ் மீது ஏற்கனவே குற்றவழக்குகள் உள்ளது.

    Next Story
    ×