காஞ்சிபுரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை- மாணவர்கள் உள்பட 4 பேர் கைது

புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 உயர்ரக மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். செவிலிமேடு பகுதியை சேர்ந்த ஜவகர் மற்றும் 3 மாணவர்கள் என்பது தெரியவந்தது. 4 பேரும் ராணிப்பேட்டை பகுதியில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து விற்பனை செய்தனர்.
காஞ்சிபுரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை- மாணவர்கள் உள்பட 4 பேர் கைது
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் கண்காணிக்கும் பணியை மாவட்ட போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 உயர்ரக மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் செவிலிமேடு பகுதியை சேர்ந்த ஜவகர் மற்றும் 3 மாணவர்கள் என்பது தெரியவந்தது. 4 பேரும் ராணிப்பேட்டை பகுதியில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து விற்பனை செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் காஞ்சிபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி 57 பொட்டலங்கள் கொண்ட ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவையும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய விலை உயர்ந்த 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 3 சிறுவர்களை சீர்திருத்தப் பள்ளிக்கும், ஜவகரை ஜெயிலுக்கும் அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com