காட்டுப்பள்ளி துறைமுகம் அருகே மூடிக்கிடந்த தொழிற்சாலையில் திருடிய 4 பேர் கும்பல் கைது

போலீசாரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்த 4 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர். காப்பர் கம்பிகளை பிரித்து எடுக்க தீவைத்து எரித்ததும் தெரியவந்தது.
காட்டுப்பள்ளி துறைமுகம் அருகே மூடிக்கிடந்த தொழிற்சாலையில் திருடிய 4 பேர் கும்பல் கைது
Published on

பொன்னேரி:

மீஞ்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சைமன் துரை மற்றும் போலீசார் இரவு காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகம் அருகே ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்குள்ள முட்புதரில் கரும்புகையுடன் தீ எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அருகில் சென்றனர்.

போலீசாரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்த 4 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அத்திப்பட்டை சேர்ந்த ரவிக்குமார், நெட்டுகுப்பத்தைச் சேர்ந்த ராம்குமார், அண்ணாமலை சேரியை சேர்ந்த திவாகர், எர்ணாவூரைச் சேர்ந்த பரத் என்பதும், காமராஜர் துறைமுகம் அருகே மூடி கிடந்த தனியார் கம்பெனியில் காப்பர் வயர்களை திருடியதும் தெரிந்தது. காப்பர் கம்பிகளை பிரித்து எடுக்க தீவைத்து எரித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 கிலோ காப்பர் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com