பூக்களின் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு- விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டத்தில் நிலவும் பனிப்பொழிவால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.
பூ மார்கெட்
பூ மார்கெட்
Published on

உப்புக்கோட்டை:

தேனி மாவட்டம் உப்புக்கோட்டை, பாலார்பட்டி, கூழையனூர், பூதிப்புரம், வாழையத்துப்பட்டி, மற்றும் சின்னமனூர்‍, கோட்டூர் சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் மல்லிகை, முல்லை, ஜாதிப்பூ, கனகாம்பரம், செண்டுப்பூ, செவ்வந்தி, ரோஜா, கோழிக்கொண்டை போன்ற பூக்கள் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் விளைச்சலடையும் பூக்கள் தேனி, சீலையம்பட்டி, ஆண்டிபட்டி என அந்தந்த பகுதியில் உள்ள பூ மார்கெட்டுகளுக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

 கடந்த வாரம் ரூ.700-800 க்கு விற்பனையான மல்லிகைப்பூ ரூ.1500க்கும், ரூ.400க்கு விற்பனை செய்த ஜாதிப்பூ ரூ.800க்கும், ரூ.600க்கு விற்பனை செய்த முல்லை ரூ.1200க்கும், ரூ.60க்கு விற்பனையான ஜம்பங்கி ரூ.80க்கும், செண்டுபூ ரூ.70, அரளி ரூ.120, செவ்வந்தி ரூ.70-150, துளசி ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com