search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய மான்கள்- நிவாரணம் கேட்டு விவசாயிகள் கோரிக்கை
    X

    மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய மான்கள்- நிவாரணம் கேட்டு விவசாயிகள் கோரிக்கை

    • 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிடப்பட்ட மக்காசோளப்பயிர்கள் மான்களால் சேதப்படுத்தி உள்ளது.
    • விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகளும், மருந்துகளும் வழங்க வேண்டும்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள ஆசூர் பஞ்சாயத்தில் தளவாய்புரம் கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

    இந்த மக்காச்சோள பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகும் நிலையில் கதிர்கள் விளைந்துள்ளது.

    இப்பகுதியில் நூற்றுக்கணக்கான மான்கள் கூட்டம் கூட்டமாக நள்ளிரவில் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் தோட்டத்திற்குள் புகுந்து அதனை தின்றும், சேதப்படுத்தியும் செல்கிறது.

    இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் இந்த பகுதியில் நாற்கர சாலை யோரத்தில் தேவராஜன் என்பவர் 5 ஏக்கர் நிலத்தில் மக்காசோளப்பயிர் பயிரிட்டுள்ளார்.

    அதேபோல் கந்தசாமி என்பவருக்கு 5 ஏக்கர், சுப்பு ராஜ் என்பவருக்கு 6 ஏக்கர், கிருஷ்ணசாமி என்பவருக்கு 4 ஏக்கர் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிடப்பட்ட மக்காசோளப்பயிர்கள் மான்களால் சேதப்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, நகைகளை வங்கியில் அடமானம் வைத்து விவசாயம் செய்து வருகிறோம். மான்கள் பயிர்களை சேதப்படுத்திய நிலையில் தற்போது எந்த பலனும் கிடைக்காமல் வங்கியில் வைத்த நகைகளை திருப்ப முடியாமல் நாங்கள் கஷ்டப்பட்டு வருகிறோம்.

    எனவே மாவட்ட நிர்வாகம், விளை நிலங்களை பார்வையிட்டு எங்களுக்கு நிவாரண வழங்க வேண்டும்.

    மேலும் இந்த பகுதியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகளும், மருந்துகளும் வழங்க வேண்டும்.

    உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாலுகா அலுவலகம் முன்பு நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்றனர்.

    Next Story
    ×