ஒரத்தநாடு அருகே வீடு இடிந்து விழுந்து விவசாயி பலி

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வீடு இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மரணம்
மரணம்
Published on

ஒத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள புலவன்காடு மேல தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் திண்ணையில் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். கடந்த சில மாதமாக பெய்த தொடர் மழையினால் அவரது வீடு ஈரம் கசிந்து அந்த வீட்டில் வெடிப்பு ஏற்பட்டு இருந்துள்ளது.

இரவு திடீரென வீட்டின் மேற்கூரை சுப்பிரமணியனின் மீது விழுந்துள்ளது. படுகாயம் அடைந்த அவரை ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பாலசுப்பிரமணியத்தை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com