திருவள்ளூர் அருகே சொத்து தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து

ஆத்திரமடைந்த சந்தானம் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணனை குத்தி விட்டு தப்பி ஓடினார். பலத்த காயம் அடைந்த கண்ணன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
திருவள்ளூர் அருகே சொத்து தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த சேலை கண்டிகை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (58). விவசாயி. இவருக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினரான சந்தானம் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்தது. 

இந்த நிலையில் நேற்று அவர்களுக்கிடையே மீண்டும் சொத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்தானம் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணனை குத்தி விட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயம் அடைந்த கண்ணன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தானத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com