தண்டையார்பேட்டையில் 2 டன் எடையுள்ள போலி பெருங்காயம் பறிமுதல்

பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமேகலை தலைமையில் தண்டையார்பேட்டை எம்.சி.எம்.கார்டன் பகுதியில் உள்ள குடோனில் சோதனை செய்தனர். கொருக்குப்பேட்டை, ஆர்.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்ததில் சுமார் 2 டன் அளவிலான போலி பெருங்காயம், பிரபல நிறுவனத்தின் போலி ஸ்டிக்கர் கைப்பற்றப்பட்டது.
தண்டையார்பேட்டையில் 2 டன் எடையுள்ள போலி பெருங்காயம் பறிமுதல்
Published on

ராயபுரம்:

பிரபல நிறுவனத்தின் கூட்டு பெருங்காயம் பெயரில் போலியாக அதே போன்று பெருங்காயங்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.

பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமேகலை தலைமையில் தண்டையார்பேட்டை எம்.சி.எம்.கார்டன் பகுதியில் உள்ள குடோனில் சோதனை செய்தனர். அதேபோன்று கொருக்குப்பேட்டை, ஆர்.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்ததில் சுமார் 2 டன் அளவிலான போலி பெருங்காயம், பிரபல நிறுவனத்தின் போலி ஸ்டிக்கர் கைப்பற்றப்பட்டது.

இதன் உரிமையாளர் யார் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com