என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியின் பெருமை முதலமைச்சரையே சேரும்- ஈவிகேஎஸ் இளங்கோவன்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டசபையில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது.
- வரும் பாராளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறும் என்பதற்கு இடைத்தேர்தல் ஓர் எடுத்துக்காட்டு.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதல் நான்கு சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 31,928 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இதை தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியின் பெருமை முதலமைச்சரையே சேரும்.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டசபையில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது.
* வரும் பாராளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறும் என்பதற்கு இடைத்தேர்தல் ஓர் எடுத்துக்காட்டு.
* அமைச்சர்கள் தேர்தலில் நின்றபோது கூட இவ்வளவு கடுமையாக உழைத்தார்களா என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story