சேலம் அருகே கல்லூரி வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

எட்டிக்குட்டை மேடு பகுதியில் செயல்படாமல் உள்ள அரசு பி.எட். கல்லூரி வளாகத்தில் மாணவர் குணால் தூக்கில் பிணமாக தொங்கினார். செயல்படாத கல்லூரி வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அருகே கல்லூரி வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
Published on

எடப்பாடி:

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கச்சுப்பள்ளி கிராமம் கோணந்தியூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன்.

இவரது மகன் குணால் (21). இவர் திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். நேற்று மாலை பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற மாணவர் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் இன்று காலை எட்டிக்குட்டை மேடு பகுதியில் செயல்படாமல் உள்ள அரசு பி.எட். கல்லூரி வளாகத்தில் மாணவர் குணால் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து அப்பகுதியினர் கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குணால் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செயல்படாத கல்லூரி வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com