தண்டையார்பேட்டையில் மின்சார ரெயில் மோதி சிறுவன் பலி

பொதுமக்கள் சிறுவனை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டையார்பேட்டையில் மின்சார ரெயில் மோதி சிறுவன் பலி
Published on

ராயபுரம்:

கொருக்குப்பேட்டை கைலாசா செட்டி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி. வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகன் லோகேஷ் (வயது 17). நேற்று இரவு லோகேஷ் தண்டையார்பேட்டையில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரெயில் மோதியது.

இதில் லோகேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com