என் மலர்
உள்ளூர் செய்திகள்

அந்தியூர் அருகே விஷப்பூச்சி கடித்து மூதாட்டி பலி
- வீட்டின் முன் கிடந்த விறகு குச்சிகளை களைத்து எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கம்மாளின் வலது கை, ஆள்காட்டி விரலில் ஏதோ ஒரு விஷப்பூச்சி கடித்து விட்டது.
- அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள நஞ்சமடைக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் அங்கம்மாள் (78). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அங்கம்மாளின் மகன் தவசிமணியும் இறந்துவிட்டார்.
இதையடுத்து, அங்கம்மாள் தனது மருமகள் சிவகாமி செல்வி (43), பேரன் அஜித்குமார் ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், வீட்டின் முன் கிடந்த விறகு குச்சிகளை களைத்து எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கம்மாளின் வலது கை, ஆள்காட்டி விரலில் ஏதோ ஒரு விஷப் பூச்சி கடித்து விட்டது.
இதையடுத்து, அங்கம்மாளை அவரது மருமகள் சிவகாமி செல்வி, பேரன் அஜித்குமார் ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அங்கம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






