மார்த்தாண்டத்தில் குழந்தைகள் நல வளர்ச்சிஅதிகாரி மீது தாக்குதல்- போலீசில் புகார்

இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இருவரையும் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.வித்யா ஸ்ரீ கொடுத்த புகாரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்த்தாண்டத்தில் குழந்தைகள் நல வளர்ச்சிஅதிகாரி மீது தாக்குதல்- போலீசில் புகார்
Published on

குழித்துறை:

கோயம்புத்தூர் பி.ஆர்.எஸ் வடக்கு தெருவை சேர்ந்தவர் வித்யாஸ்ரீ (வயது 24). இவர் திருவட்டார் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் உள்ள தனியார் வாடகை குடியிருப்பு விடுதியில் கடந்த ஒரு வருடமாக தங்கி வருகிறார். அவரது அறையில் ஏற்கனவே அவருடன் தங்கி இருந்த பெண்மணி அந்த அறையை விட்டு சென்று விட்டதால், கடந்த 5 தினங்களுக்கு முன்பு வேறொரு பெண் அவரது அறையில் தங்கியுள்ளார்.

நேற்று மாலை அவர் திடீரென வித்யாஸ்ரீயை தாக்கி கடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் வித்யா ஸ்ரீ கத்தி கூச்சலிட்டுள்ளார்.இதில் இருவரும் கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இருவரையும் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இது குறித்து வித்யா ஸ்ரீ கூறும்போது :- அந்த பெண் வேலை எதுவும் இன்றி சும்மா அறையில் இருப்பதாகவும், அவர் தன்னை கொலை செய்யும் நோக்கத்துடன் காயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். வித்யா ஸ்ரீ கொடுத்த புகாரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com