என் மலர்
உள்ளூர் செய்திகள்

தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்- குறைதீர்ப்பு முகாமில் கோரிக்கை
- கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.
- பொன்னேரி அடுத்த சின்ன காவனம் சுடுகாட்டு சாலையில் மின் கம்பம் நடப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிறது.
பொன்னேரி:
பொன்னேரி கோட்டத்தில் அடங்கிய பொன்னேரி, கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி பொன்னேரி ஆரம்பாக்கம், மெதுர் திருப்பாலைவனம், பகுதி மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் வேண்பாக்கம் துணை மின் நிலைய அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தெரிவித்ததாவது. கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. எனவே தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். பொன்னேரி நகராட்சி பகுதிகளில் மின்சாரத்தை பூமிக்கடியில் எடுத்துச் செல்ல வேண்டும் பொன்னேரி அடுத்த சின்ன காவனம் சுடுகாட்டு சாலையில் மின் கம்பம் நடப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிறது. அங்கு மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயத்திற்கு மின் இணைப்பை தாமதம் இன்றி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இது தொடர்பான மனுக்களையும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






