கும்மிடிப்பூண்டியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை

குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கம்மர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாசி(வயது60). ஓய்வுபெற்ற மின் ஊழியர். இவரது மனைவி பூங்கொடி(55). இவர்களுக்கு பாரதி என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 10-ந்தேதியும் மாசி, பூங்கொடி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பூங்கொடி தற்கொலை செய்யப்போவதாக கூறி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் மாசி, நீ மட்டும் தான் விஷம் குடிப்பியா, நானும் குடிப்பேன் என்று கூறி மனைவியின் கையில் மீதம் இருந்த விஷத்தை அவரும் பிடுங்கி குடித்தார்.

இதில் இருவரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூங்கொடி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கும் மாசிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மாசியும் உயிரிழந்தார்.

குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com