சின்னமனூரில் காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கார்த்திக் மாயமானார்.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சின்னமனூரில் காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை
Published on

சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூர் ராஜா ரைஸ்மில் தெருவை சேர்ந்த பாண்டியராஜன் மகன் கார்த்திக் (வயது20). இவர் தேனியில் உள்ள கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கார்த்திக் மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் பெற்றோர்கள் தேடினர். ஆனால் எங்கும் கிடைக்காததால் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை கார்த்திக் தனது வீட்டு மாடியில் உள்ள அறையில் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.

இதை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கார்த்திக் தன்னுடன் படித்த போடியை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர் காதலை ஏற்கவில்லை. இதனால் மாணவியை தேடி சென்றபோது அவர் காதலிக்க மறுத்ததால் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com