என் மலர்
உள்ளூர் செய்திகள்

இந்திய அணுமின் கழகம் சார்பில் 2.44 கோடி ரூபாய் செலவில் அரசு பள்ளிகளுக்கு வகுப்பறைகள்
- சிட்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.
- திருக்கழுகுன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், அணுமின் நிலைய அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.
மாமல்லபுரம்:
இந்திய அணுமின் கழகம், கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலையம் சார்பில் அதன் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் சுற்று வட்டார அரசு பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டிடம் கட்டிக் கொடுக்க முடிவு செய்து ரூ.2.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதில் திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பூஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சிட்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.
அதன் பணிகள் நிறைவடைந்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு இந்திய அணுமின் கழக தொழில்நுட்ப இயக்குனர் பண்டாக்கர் (மும்பை) திறந்து வைத்தார். சென்னை அணுமின் நிலைய இயக்குனர் ஷெல்கே, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், திருக்கழுகுன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், அணுமின் நிலைய அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.






