சஸ்பெண்டு
சஸ்பெண்டு

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்ட சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

சமூக வலைதளங்களில் தேவை இல்லாமல் காவலர்கள் கருத்துக்களை பதிவு செய்யக்கூடாது என்று உயர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Published on

சென்னை:

சமூக வலைதள பக்கத்தில் பூக்கடை சப்-இன்ஸ்பெக்டர் சேகர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். ரூ.5 ஆயிரம் நிவாரணம் தொடர்பாக அவர் வெளியிட்டு இருந்த கருத்து போலீஸ் அதிகாரிகள் மத்தியிலும் பரவியது.

இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரை நேரில் அழைத்து அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் தனது குழந்தை தெரியாமல் அதனை பதிவிட்டு விட்டதாக தெரிவித்தார்.

அவரது விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை.

இதனை தொடர்ந்து கமி‌ஷனர் சங்கர் ஜிவால், சப்-இன்ஸ்பெக்டர் சேகரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். சமூக வலைதளங்களில் தேவை இல்லாமல் காவலர்கள் கருத்துக்களை பதிவு செய்யக்கூடாது என்று உயர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதை மீறி அரசியல்வாதிகள் போல கருத்துக்களை பதிவிடும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com