சென்னை விமான நிலையத்தில் வங்கதேச பயணி மரணம்

வங்காள தேசம் செல்வதற்காக, நேற்று இரவு சென்னை விமான நிலையத்துக்கு மகன்களுடன் வந்தார்.பாதுகாப்பு சோதனை முடிந்து விமானத்தில் ஏறுவதற்காக உள்ளே சென்று கொண்டிருந்த போது திடீரென அலிம் உட்டின் மயங்கி கீழே விழுந்தார்.
சென்னை விமான நிலையத்தில் வங்கதேச பயணி மரணம்
Published on

ஆலந்தூர்:

வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் அலிம் உட்டின் (வயது65). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 மகன்களுடன் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். தொடர்ந்து அவர் அங்கு தங்கி சிகிச்சை பெற்றார்.

ஓரளவு உடல்நிலை சரியானதால் ஆஸ்பத்திரியில் இருந்து அலிம் உட்டின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் அவர் வங்காள தேசம் செல்வதற்காக, நேற்று இரவு சென்னை விமான நிலையத்துக்கு மகன்களுடன் வந்தார்.

பாதுகாப்பு சோதனை முடிந்து விமானத்தில் ஏறுவதற்காக உள்ளே சென்று கொண்டிருந்த போது திடீரென அலிம் உட்டின் மயங்கி கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு விமான நிலைய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக அலிம் உட்டின் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு உடன் வந்த 2 மகன்களும் கதறி துடித்தனர்.

விமான நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com