வாழப்பாடி அருகே விபத்து: ஒரே நேரத்தில் 2 பள்ளி பஸ்கள் மீது தனியார் பஸ் மோதல்

விபத்தில் 2 பள்ளி பஸ்களிலும் பயணித்த மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏத்தாப்பூர் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
வாழப்பாடி அருகே விபத்து: ஒரே நேரத்தில் 2 பள்ளி பஸ்கள் மீது தனியார் பஸ் மோதல்
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இன்று காலை வழக்கம் போல இப்பள்ளியின் 2 பஸ்கள் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பெரிய கிருஷ்ணாபுரம் அருகே அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தது.

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை பஸ்கள் கடக்க முயன்றபோது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று, இந்த 2 பள்ளி பேருந்துகள் மீதும் ஒரே நேரத்தில் பலமாக மோதியது.

இந்த விபத்தில் 2 பள்ளி பஸ்களிலும் பயணித்த மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று பள்ளி குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தனியார் பள்ளி பஸ்கள் விபத்தானது குறித்து தகவல் வெளியானதால் விபத்து நடந்த பகுதியில் பெற்றோர்கள் குவிந்ததால் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

ஏத்தாப்பூர் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com