கண்டமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி கொத்தனார் உயிரிழப்பு

கண்டமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி கொத்தனார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

கண்டமங்கலம்:

விழுப்புரம் மாவட்டம் ‌‌க‌‌ண்டமங்கலம் அருகே உள்ள தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 42) கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். வீராணம் ஏரியில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.

அந்த வழியாக சென்ற துப்புரவு பணியாளர்கள் ஏரியில் குமார் பிணமாக மிதப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குமாரின் மனைவி செல்வி கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com