நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி விலை சரிவு

நாமக்கல் மாவட்டத்தில் சில்லறை விலையில் கடந்த வாரம் ஒரு கிலோ கறிக்கோழி ரூ. 260-க்கு விற்கப்பட்டது. தற்போது அதன் விலை படிப்படியாக சரிந்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கறிக்கோழி
கறிக்கோழி
Published on

நாமக்கல்:

தமிழகத்தில் பல்லடம், உடுமலை, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் தினமும் சராசரியாக தலா 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த கறிக்கோழிக்கு பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள ஒருங்கிணைப்பு குழு(பி.சி சி.) மூலம் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. பெட்ரோல். டீசல், தீவனம் விலை உயர்வால் கறிக்கோழி விலையும் கிடுகிடு உயர்ந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் சில்லறை விலையில் கடந்த வாரம் ஒரு கிலோ கறிக்கோழி ரூ. 260-க்கு விற்கப்பட்டது. தற்போது அதன் விலை படிப்படியாக சரிந்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உயிருடன் ஒரு கிலோ கறிக்கோழி கடந்த வாரம் 116 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது ஒரு கிலோவுக்கு 5 ரூபாய் குறைந்து 111 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மாரியம்மன் கோவில் பண்டிகை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கறிக் கோழியின் தேவை குறைந்து அதன் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கறிக்கோழி விலை சரிந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com