ஓசூரில் இன்று மாலை பா.ஜ.க. பொதுக்கூட்டம்- அண்ணாமலை பங்கேற்பு

அண்ணாமலை வருகையையொட்டி ஓசூர் நகரில் வழி நெடுக பா.ஜ.க. கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தது. அண்ணாமலை வருகையொட்டி தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.
ஓசூரில் இன்று மாலை பா.ஜ.க. பொதுக்கூட்டம்- அண்ணாமலை பங்கேற்பு
Published on

ஓசூர்:

மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஓசூர் ராம்நகரில் இன்று மாலை 4 மணி அளவில் நடக்கிறது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார். இதையடுத்து அண்ணாமலை வருகையையொட்டி ஓசூர் நகரில் வழி நெடுக பா.ஜ.க. கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தது. அவரை வரவேற்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணாமலை வருகையொட்டி தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com