தருமபுரியில் இன்று மாலை பா.ஜனதா பொதுக்கூட்டம்- அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார்

பென்னாகரம் மெயின் ரோடு மேம்பாலம் அருகில் மாலை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேச உள்ளார்.பொதுக்கூட்டத்துக்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.
தருமபுரியில் இன்று மாலை பா.ஜனதா பொதுக்கூட்டம்- அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார்
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் வழியாக காவிரி, தென்பெண்ணை ஆகிய முக்கியமான இரண்டு ஆறுகள் கடந்து செல்கின்றன. ஆனால் தருமபுரியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனை தவிர்க்க காவிரியில் இருந்து வெளியேறி வீணாக செல்லும் நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பி சேமித்து பயன்படுத்த வேண்டும் என்று பல வருடங்களாக வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தருமபுரியில் பா.ஜனதா கட்சி சார்பில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பென்னாகரம் மெயின் ரோடு மேம்பாலம் அருகில் மாலை நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேச உள்ளார்.

இந்த பொதுக்கூட்டத்துக்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.

மேலும் தருமபுரி மாவட்ட எல்லை தொடங்கி நகரம் முழுவதும் அண்ணாமலையை வரவேற்று அக்கட்சியினர் வரவேற்பு பதாகைகள், தோரணங்கள் கட்டியுள்ளனர்.

அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் பா.ஜனதா நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com