போடி அருகே நகை பாலீஸ் போட்டு தருவதாக ஏமாற்றிய பீகார் வாலிபர் கைது

பாண்டீஸ்வரன் வீட்டுக்குள் அனுமதித்துள்ளார். இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது பாண்டீஸ்வரனுக்கு அந்த இளைஞர் மீது சந்தேகம் எழுந்தது.பாண்டீஸ்வரன் அந்த வாலிபரை போடி நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போடி அருகே நகை பாலீஸ் போட்டு தருவதாக ஏமாற்றிய பீகார் வாலிபர் கைது
Published on

மேலசொக்கநாதபுரம்:

போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் கோட்டை கருப்பன் மகன் பாண்டீஸ்வரன் (வயது40). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் நகைக்கு பாலீஸ் போட்டு தருவதாக கூறி உள்ளார்.

இதனால் அவரை பாண்டீஸ்வரன் வீட்டுக்குள் அனுமதித்துள்ளார். இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது பாண்டீஸ்வரனுக்கு அந்த இளைஞர் மீது சந்தேகம் எழுந்தது. நகைக்கு பாலீஸ் போட வேண்டாம் என கூறி திருப்பி அனுப்பி விட்டார். இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மேஜை மீது வைத்திருந்த பணத்தை காணவில்லை. இதையடுத்து பக்கத்து தெருவில் இருந்த அந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது பணத்தை அவர் திருடியது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து பாண்டீஸ்வரன் அந்த வாலிபரை போடி நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பீகார் மாநிலம் சத்தீஸ்கர் அருகே உள்ள லட்சுமிபரையைச் சேர்ந்த புத்தேவ் மகன் சன்னிகுமார் (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com