மதுக்கடையில் டிப்ஸ் பணத்தை பிரிக்கும் தகராறில் பார் ஊழியர் அடித்துக்கொலை - நண்பர் கைது

டாஸ்மாக் பாரில் டிப்ஸ் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை
கொலை
Published on

பூந்தமல்லி:

திருவேற்காடு அடுத்த கோலடியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இதனை ஒட்டியே பார் உள்ளது. இதில் நண்பர்களான முனிராஜ் (வயது 29), முனிசெல்வம் (24) ஆகிய இருவரும் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

நேற்று இரவு மது அருந்த வந்த நபர் ஒருவர் மது அருந்தி விட்டு முனிராஜ் கையில் ரூ. 100 டிப்ஸ் கொடுத்து விட்டு இருவரையும் பிரித்து கொள்ளுமாறு கூறி சென்றுள்ளார்.

இந்த நிலையில் முனிராஜ் டிப்ஸ் பணத்தை பிரித்து முனி செல்வத்துக்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த முனிசெல்வம் முனிராஜை சரமாரியாக தாக்கினார். இதில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். மது போதையில் முனிராஜ் விழுந்து விட்டதாக நினைத்து அங்கிருந்து முனிசெல்வம் சென்றுவிட்டார்.

இன்று காலையில் பார்த்த போது முனிராஜ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வந்த திருவேற்காடு போலீசார் விரைந்து வந்து முனிராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக முனி செல்வத்தை கைது செய்தனர். கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com