குரும்பூரில் ஆட்டோவில் அழைத்து சென்று இளம்பெண் பலாத்காரம்- டிரைவர் கைது

காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய்துள்ளார்.பாதிக்கப்பட்ட இளம்பெண் குரும்பூர் போலீசில் புகார் செய்தார்.
குரும்பூரில் ஆட்டோவில் அழைத்து சென்று இளம்பெண் பலாத்காரம்- டிரைவர் கைது
Published on

குரும்பூர்:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 25 வயது மதிப்புள்ள இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் குரும்பூருக்கு வந்துள்ளார்.

பின்னர் குரும்பூர் பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஆட்டோவில் வந்த டிரைவர் அவர் செல்ல வேண்டிய முகவரிக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் இளம்பெண் கூறிய முகவரிக்கு செல்லாமல் மாறாக ஏரல் சாலையில் அழைத்து சென்றுள்ளார்.

ஏரல்-குரும்பூர் சாலை மறுகால் ஓடை பாலத்தின் கீழ் காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய்துள்ளார். அவரை தொடர்ந்து அந்த வழியாக மோட்டார் கை்கிளில் வந்த வாலிபர் ஒருவரும் அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். பின்னர் ஆட்டோ டிரைவரும், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் குரும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா விசாரணை நடத்தினார். அதில் இளம்பெண்ணை ஆட்டோவில் அழைத்து சென்று கற்பழித்தது ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் சன்னிதி தெருவை சேர்ந்த அய்யப்ப நயினார் மகன் முத்துராம்குமார் என்ற தங்கம் (வயது 22) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குரும்பூர் நெட்டையன்காலனியை சேர்ந்த 4 வாலிபர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com