search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகர் அருகே ஆட்டோ-வேன் மோதல்: 10 மாணவர்கள் படுகாயம்
    X

    விருதுநகர் அருகே ஆட்டோ-வேன் மோதல்: 10 மாணவர்கள் படுகாயம்

    • விபத்து குறித்து தகவல் அறிந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவ-மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினர்.
    • காயமடைந்த மாணவ-மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். விபத்து தொடர்பாக வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள துலுக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 2 மாணவிகள், 8 மாணவர்கள் என 10 பேர் இன்று காலை ஆட்டோவில் ஆவுடையாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆட்டோவை நாகராஜன் என்பவர் ஓட்டினார். ஆவுடையாபுரம் ரெயில்வே கேட் பகுதியில் ஆட்டோ சென்ற போது எதிரே வந்த பட்டாசு ஆலை வேன் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி சேதமடைந்தது.

    அதில் பயணித்த மாணவ-மாணவிகள் பாண்டீஸ்வரி (வயது 15), ராம் பிரியா (14), அபினேஷ் (11), கருப்பசாமி (11), லோகேஷ் (11), மற்றொரு கருப்பசாமி (11), ரித்திஷ் (எ) முனியாண்டி (11), அஜய் மற்றும் முருகன் மகன் கருப்பசாமி, ஆட்டோ டிரைவர் நாகராஜன் உள்பட 11 பேர் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவ-மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவ-மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினர்.

    அப்போது காயமடைந்த மாணவ-மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். விபத்து தொடர்பாக வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×