கணவருக்கு ஜாமீன் கிடைக்காததால் 6 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

சேலம் அருகே கஞ்சா வழக்கில் சிறையில் இருக்கும் கணவருக்கு ஜாமீன் கிடைக்காத விரக்தியில் 6 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
6 குழந்தைகளுடன் தீக்குளிகக முயன்ற பெண்ணை போலீசார் மீட்ட காட்சி
6 குழந்தைகளுடன் தீக்குளிகக முயன்ற பெண்ணை போலீசார் மீட்ட காட்சி
Published on

சேலம்:

சேலம் மணியனூர் காத்தாய் அம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 34). இவரது மனைவி மரகதம் (29). இவர் இன்று காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது 5 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வந்தார். பின்பு திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண் எண்ணை கேனை திறந்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மரகதம் கையிலிருந்த கேனை பிடிங்கி அவரிடம் விசாரணை நடத்தினர். மரகதத்தின் கணவர் கோபால் கடந்த மாதம் 15-ந் தேதி அன்னதானப்பட்டி போலீசாரால் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பின்பு அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கணவரை ஜாமீனில் எடுக்க மரகதம் பலமுறை முயன்றார். எனினும் ஜாமீன் கிடைக்காத விரக்தியில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com