அசோக் நகரில் மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்: கல்லூரி மாணவர் பலி
போரூர்:
சென்னை வில்லிவாக்கம், நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் லிங்கேஸ்வரன் (வயது21). தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் இன்று அதிகாலை 5 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் கிண்டி நோக்கி 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அசோக் பில்லர் சந்திப்பு அருகே வந்தபோது அவ்வழியே வந்த டாரஸ் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக லிங்கேஸ்வரன் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லிங்கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கிண்டி போக்குவரத்து போலீசார் லிங்கேஸ்வரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


