அரும்பாக்கம் நட்சத்திர விடுதியில் பெயிண்டர் தவறி விழுந்து பலி

பலத்த காயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பலியானார். சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரும்பாக்கம் நட்சத்திர விடுதியில் பெயிண்டர் தவறி விழுந்து பலி
Published on: 

அரும்பாக்கத்தில் பிரபல நட்சத்திர விடுதி உள்ளது. 100 அடி சாலையை ஒட்டி உள்ள இதன் வளாகத்தில் 2 மாடியில் புதிய கட்டிடம் உள்ளது. அங்கு பெயிண்டிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஜய்(18) என்பவர் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் பணியில் ஈடுபட்ட போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com