ஆரல்வாய்மொழி அருகே கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

போலீசார் விரைந்து வந்து மிதின்குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரல்வாய்மொழி அருகே கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ஆரல்வாய்மொழி:

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் சத்யம் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ராயகிரியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் மிதின்குமார் (வயது 19) என்பவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.

நேற்றிரவு நண்பர்களுடன் பேசி விட்டு மிதின்குமார் தனது அறைக்கு சென்றார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை. நண்பர்கள் சென்று பார்த்தபோது மிதின்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கல்லூரி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தது. அதன்பேரில் மிதின்குமாரின் தந்தை மணிகண்டன் கல்லூரிக்கு விரைந்து வந்தார். சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து மிதின்குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் மிதின்குமார் சொந்த ஊரில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், அந்த பெண் கடந்த 2 நாட்களாக அவரிடம் பேசாததால் மன வேதனையடைந்து தற்கொலை செய்ததாகவும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com