புதுச்சேரியிலிருந்து சூனாம்பேடு பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

புதுச்சேரியிலிருந்து சூனாம்பேடு பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்திய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபாட்டில்களை கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது
மதுபாட்டில்களை கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது
Published on

திண்டிவனம்:

திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ராதிகா தலைமையில் போலீசார் பெரும்பாக்கம் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது புதுச்சேரியிலிருந்து சூனாம்பேடு பகுதிக்கு சென்று கொண்டுஇருந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர் அந்த வாகனத்தில் 25 பெட்டிகளில் 180ml கொள்ளளவு கொண்ட1200 மதுபாட்டில்கள் கடத்துவது தெரிந்தது. 

வாகனத்தை ஓட்டிவந்த மரக்காணம் வட்டம் கந்தாடு கிராமத்தைச் சேர்ந்த ராகவன் மகன் ரமேஷ் வயது 45 என தெரிந்தது மதுவிலக்கு போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர் மேலும் மது பாட்டில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா சூனாம்பேடு காலனியைச் சேர்ந்த தென்னவன் மனைவி குமாரி வயது 50 என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com