திண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து ஆந்திரா டிரைவர் பலி

திண்டிவனம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோர மரத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் ஆந்திரா டிரைவர் பலியானார்.
விபத்து
விபத்து
Published on

திண்டிவனம்:

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் ராகுல்(வயது21). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 3 ஆண்டுகளாக டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று மாலை சென்னையில் இருந்து கோவை ஈசா சிவராத்திரி விழாவுக்கு நண்பர்கள் 6 பேருடன் காரை ஓட்டி சென்றார். அப்போது திண்டிவனம் அருகே பாதிரி கிராமம் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோர மரத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ராகுல் மற்றும் அவருடன் வந்த நண்பர்கள் பலத்த காயமடைந்தனர். விபத்தை பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மேல்மருவத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் உயிரிழந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com