விக்கிரவாண்டி ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி

விக்கிரவாண்டி ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.கீழ் கோர்ட்டில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் 8 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளனர்.
விக்கிரவாண்டி ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில அன்பு ஜோதி ஆசிரமம் இயங்கி வந்தது.

இங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் துன்புறுத்தப்படுவதாகவும், ஆசிரமத்தில் இருந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, மேலாளர் பிஜூமோன், ஆசிரம பணியாளர்கள் சதிஷ், அய்யப்பன், கோபிநாத், பூபாலன், முத்துமாரி, தாஸ் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் வயது முதிர்வு காரணமாக தாஸ் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 8பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 8 பேரும் ஜாமீன் கேட்டு விழுப்புரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி (பொறுப்பு) சாந்தி முன்னிலையில விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பு ஜோதி ஆசிரம வழக்கு விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஜூபின் பேபி உள்பட 8 பேருக்கும் ஜாமீன் வழங்க கூடாது என்று அரசு தரப்பு வக்கீல் சங்கீதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஜபின் பேபி உள்பட 8 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். கீழ் கோர்ட்டில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் 8 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com