search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
    X

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

    • போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்து உள்ளது.
    • சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலம் 6 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் தொந்தரவு , கற்பழிப்பு, கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக பதிவாகும் வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை எடுக்கப்பட்ட போலீசாரின் புள்ளிவிவரப்படி இந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பாலியல் தொடர்பான வழக்குகள் கூடுதலாக பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்

    சென்ற ஆண்டு இந்த 4 மாதங்களில் கற்பழிப்பு தொடர்பாக 137 வழக்கு பதிவானது. இந்த ஆண்டு இது 148 ஆக உயர்ந்து இருக்கிறது.

    சில்மிஷம் தொடர்பாக பதிவான வழக்குகள் 307-ல் இருந்து 407 ஆகவும், செக்ஸ் சித்ரவதை தொடர்பான வழக்கு 13-ல் இருந்து 20 ஆகவும், பதிவாகி உள்ளது.

    போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்து உள்ளது.

    இது 879-ல் இருந்து 1,060 ஆக அதிகரித்து இருக்கிறது.

    பெண்கள் மத்தியில் போலீசார் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக இது போன்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக போலீஸ் டி.ஜ.ஜி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    முன்பு இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக புகார் கொடுக்க பெண்கள் தயங்கினார்கள். ஆனால் இப்போது அவர்களுக்காக காவல் உதவி என்ற மொபைல் ஆப் தொடங்கபட்டு உள்ளது.மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதறகாக ஏ.டி.ஜி.பி.வன்னியபெருமாள் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இதுவரை 466 விழிப்புணர்வு பேரணி, மற்றும் 42,359 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொது இடங்களில் நடத்தப்பட்டு உள்ளன. போலீசார் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் பெண்கள் தங்களுக்கு, இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து துணிந்து போலீசில் புகார் செய்து வருகிறார்கள். இதனால் குற்றவாளிகள் மீது போக்சோ சட்டம், குண்டர் சட்டம் போன்ற குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு தண்டணை வழங்கப்பட்டு வருகிறது.

    723 போக்சோ வழக்குகளில் 86 பேருக்கு தண்ட ணை கொடுக்கப்பட்டு உள்ளது. மற்றவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    கடந்த மே 1-ந்தேதி வரை பெண்கள் உதவி எண் (181) மூலம் 11,778 அழைப்புகளும், குழந்தைகள் உதவிஎண் (1998) மூலம் 39,758 அழைப்புகளும்.காவலன் ஆப் மூலம் 15,246 புகார்களும் வந்துள்ளது. இந்த அழைப்புகளுக்கு எல்லாம் போலீசார் பதில் அளித்து வருகிறார்கள்.

    இந்த பணியில் 800 பெண் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலம் 6 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.




    Next Story
    ×