கன்னியாகுமரி அருகே 9-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கட்டிட தொழிலாளி கைது

மாணவியின் தாயார் கன்னியாகுமரியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ண ராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கன்னியாகுமரி அருகே 9-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கட்டிட தொழிலாளி கைது
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமி சம்பவத்தன்று பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டுமாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

இவர் தனது வீட்டுக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது வழுக்கம்பாறை சகாயபுரத்தைச் சேர்ந்த ஜான்சன் (வயது 30) என்பவர் மாணவியை தான் வீட்டில் கொண்டு விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர், மாணவியை அந்தப் பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார்.

பின்னர் அங்கு வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அங்கு இருந்து தப்பி ஓடி தனது வீட்டுக்கு வந்த சிறுமி நடந்தது பற்றி தனது தாயாரிடம் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இது பற்றி அவரது தாயார் கன்னியாகுமரியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ண ராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக கட்டிடத் தொழிலாளி ஜான்சனை போலீசார் கைது செய்தனர். ஜான்சனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com