வேடசந்தூரில் சமையல் அறையில் புகுந்த 7 அடி நீள கருநாகம்

7 அடி நீள கருநாகப்பாம்பு வெளியே வந்து படமெடுத்து ஆடியது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாம்பை வீட்டைவிட்டு வெளியேற்ற போராடினர்.
வேடசந்தூரில் சமையல் அறையில் புகுந்த 7 அடி நீள கருநாகம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காக்காதோப்பு தெற்குதெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி(49). தனியார் மில்லில் வேலைபார்த்து வருகிறார். நேற்றுஇரவு வேலை முடித்து தனது வீட்டிற்கு வந்த முத்துலட்சுமி சமையல் அறையில் சமையல் செய்தவற்காக பாத்திரங்களை எடுத்தார்.

அப்போது திடீரென 7 அடி நீள கருநாகப்பாம்பு வெளியே வந்து படமெடுத்து ஆடியது. இதைபார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாம்பை வீட்டைவிட்டு வெளியேற்ற போராடினர். ஆனால் நீண்டநேரமாக சமையல் அறையில் படமெடுத்து ஆடிய கருநாக பாம்பு சுமார் அரைமணிநேரத்திற்கு பின்பு அங்கிருந்து வெளியேறியது. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்குள் பாம்பு வெளியேறிச்சென்றதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com